முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா 17-ம் தேதி தொடங்குகிறது

வெள்ளிக்கிழமை, 9 அக்டோபர் 2020      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா வருகிற 17-ம் தேதி தொடங்குகிறது. கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி மட்டும் எழுந்தருளும் நிகழ்ச்சி மட்டும் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களிலும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக ஆடி முளைக்கொட்டு, புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை.

இந்தாண்டு நவராத்திரி உற்சவ விழா வரும் 17-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடக்கிறது. அதையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி தருவார். 

மேலும் திருவிழா நாட்களில் மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு விஷேச பூஜைகள் நடைபெறும். திருவிழாவையொட்டி சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் கொலு சாவடிக்காக தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்படும். அங்கு மீனாட்சியின் மகிமை, சுந்தரேசுவரரின் திருவிளையாடலை விளக்கும் கொலு பொம்மைகள் மற்றும் சிவன் மற்றும் சக்தியின் அம்சங்கள் குறித்த பொம்மைகள் இடம் பெறும்.  

கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இறுதியில் அனைத்து மத கோவில்களும் மூடப்பட்டது. தற்போது தொற்று குறைந்ததால் தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் கடந்த மாதம் திறக்கப்பட்டது.

அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். ஆனால் கோவில் திருவிழாவின் போது கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனால் மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற இருந்த பல்வேறு திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழா நடைபெறுமா என்பது பற்றி இதுவரை அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. 

ஆனால் மீனாட்சி அம்மன் கோவிலில் பெரிய திருவிழாவான நவராத்திரி விழாவின் போது பக்தர்கள் அதிகமாக வருவார்கள். மேலும் கொலுச்சாவடி அமைப்பதற்கான வேலைகள் அனைத்தும் 10 நாட்களுக்கு முன்பே தொடங்கி விடும்.

ஆனால் தற்போது வரை அதற்கான வேலைகள் எதுவும் தொடங்கப்படாமல் இருப்பதாக தெரிய வருகிறது.   மேலும் கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி மட்டும் எழுந்தருளும் நிகழ்ச்சி மட்டும் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொலுசாவடியில் பொம்மைகள் இல்லாமல் திருவிழா நடத்தப்பட்டால் அது திருவிழா நடத்துவதற்கான முழுமை பெறாது என்று பக்தர்கள் கருதுகிறார்கள். எனவே கொலுசாவடியில் பொம்மைகள் வைத்து, அனைத்து நிகழ்ச்சிகளுடன் நவராத்திரி விழாவை நடத்த வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து