உலக பிரியாணி தினத்தில் 1.5 கி.மீ. தூரம் வரிசையில் நின்று வாங்க குவிந்த மக்கள்

ஞாயிற்றுக்கிழமை, 11 அக்டோபர் 2020      இந்தியா
Biryani-Day 2020 10 11

Source: provided

பெங்களூர் : உலக பிரியாணி தினத்தையொட்டி, கர்நாடக மாநிலம் ஹோஸ்கோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரியாணி பிரியர்கள் வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர். இந்த ருசிகர சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:

பெங்களூரு அருகில் உள்ள ஹோஸ்கேட் நகரில் உள்ள ஆனந்த் தம் பிரியாணி கடை மிகவும் பிரபலமானது. அந்த கடையில் தயாரிக்கப்படும் பிரியாணி அப்பகுதி வட்டாரத்தில் மிகவும் சுவையானது என்பதால் பெரும் கூட்டம் கூடும். மக்கள் கூட்டத்தைச் சமாளிக்க வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான கிலோ அளவில் பிரியாணி தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். அதிகாலையில் தொடங்கும் பிரியாணி விற்பனை சில மணி நேரங்களில் முடிவடைந்துவிடும். 

நேற்று வார விடுமுறை நாள் என்பதாலும், உலக பிரியாணி தினம் என்பதாலும் பிரியாணி வாங்குவதற்காக அதிகாலை முதலே இந்தக் கடை முன் மக்கள் கூடத் தொடங்கிவிட்டனர். மக்கள் முகக்கவசத்துடன் பிரியாணி வாங்குவதற்காக நிற்கத் தொடங்கினர்.  நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்தது. இதனால் சுமார் 1.5 கிமீ தொலைவிற்கு வரிசை நீண்டது. 

இதுகுறித்து கடையின் உரிமையாளர் கூறுகையில், ‘22 ஆண்டுகளாக கடை நடத்தி வருகிறோம். நாள்தோறும் ஆயிரக்கணக்கான கிலோ அளவில் பிரியாணி செய்து விற்பனை செய்கிறோம். வார இறுதி நாட்களில், விடுமுறைகளில் இது இன்னும் அதிகரிக்கும். எங்கள் கடையில் செயற்கையான பொருட்கள், சுவைக்கு ரசாயனப் பொருட்கள் சேர்க்காமல் பிரியாணி செய்வதால் மக்கள் விரும்புகிறார்கள்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து