எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் ஐப்பசி மாத திருவிழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு, திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் தலைமை அர்ச்சகரான பெரிய நம்பி உள்பட கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 7-ந் தேதி கொரோனா பரிசோதனை நடந்தது. அப்போது தலைமை அர்ச்சகரான பெரிய நம்பி, கோவில் ஊழியர்கள் உள்பட 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு 15-ந் தேதி வரை தடையும் விதிக்கப்பட்டது. அதே சமயத்தில், கோவிலில் தினசரி பூஜைகள் மற்றும் சடங்குகள் தந்திரி தரண நல்லூர் சதீசன் நம்பூதிரி தலைமையில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே பத்மநாபசாமி கோவில் ஐப்பசி மாத திருவிழா வருகிற 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஐப்பசி திருவிழா தள்ளி வைக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே திருவல்லம் பரசுராமர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களின் திருவிழாக்கள் ஒத்தி வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


