இமாச்சலபிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூருக்கு கொரோனா தொற்று

திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2020      இந்தியா
Jairam-Tagore 2020 10 12

Source: provided

சிம்லா : இமாச்சலபிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. வைரஸ் தாக்குதலுக்கு பொதுமக்கள் முதல் மத்திய மந்திரிகள், மாநிலமுதல்மந்திரிகள் என அனைவரும் இலக்காகி வருகின்றனர். 

அந்த வகையில், இமாச்சலபிரதேச மாநில முதல்மந்திரி ஜெய்ராம் தாகூருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, முதல்மந்திரி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்மந்திரி ஜெய்ராம் தாகூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்ததால் கடந்த ஒரு வாரமாக நான் எனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தேன்.

ஆனால், கடந்த 2 நாட்களாக எனக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டது. இதையடுத்து, நான் பரிசோதனை செய்துகொண்டேன். பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனால், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி நான் எனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்’என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து