மும்பையில் மின்தடையை விரைவில் சீர் செய்வதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளேன் - மராட்டிய முதல்வர்

திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2020      இந்தியா
Uttav-Thackeray 2020 10 12

Source: provided

மும்பை : மும்பையில் மின்விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது.

கல்வா பகுதியில் உள்ள டாடா நிறுவனத்தின் மின் விநியோக தொகுப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மும்பையில் பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. இதனால் ஜுகு, அந்தேரி, மிரா ரோடு, நேவி மும்பை, தானே, பான்வெல் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரமின்றி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் மும்பைப் புறநகர் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

அதேநேரம் மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களை பயன்படுத்தியதால் இதுவரை எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்விநியோகத் தொகுப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே மின்சாரம் தடைபட்டதாகவும், சிரமங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் மும்பை மாநகராட்சி கூறியுள்ளது.

மின்சார தடை குறித்து சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் மின் தடை குறித்து பதிவிட்டுள்ளார்.

மிந்தடை குறித்து மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

மும்பை நகரில் மின்தடை குறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிதின்ராவத் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் கேட்டு அறிந்தேன் மின்தடையை விரைவில் சீர் செய்வதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளேன் என மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து