உலக அளவில் 4 கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு

சனிக்கிழமை, 17 அக்டோபர் 2020      உலகம்
corona-virus-1

Source: provided

ஜெனீவா : உலக அளவில் கொரோனா பாதிப்பு 4 கோடியை நெருங்குகிறது சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.95 கோடியைத் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.96 கோடியைக் கடந்தது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 71 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11.08 லட்சத்தைக் கடந்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து