தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியத்தின் இளைய மகன் அன்பழகன் உயிரிழப்பு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சனிக்கிழமை, 17 அக்டோபர் 2020      தமிழகம்
Edappadi 2020 10 17

Source: provided

சென்னை : சைதாப்பேட்டை தி.மு.க. எம்.எல்.ஏ. மா. சுப்ரமணியனின் இளைய மகன் அன்பழகன் உடல் நலக் குறைவால் நேற்று காலமானார்.

தி.மு.க.வின் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், சைதாப்பேட்டை தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான மா.சுப்ரணியத்தின் இளைய மகன் அன்பழகன் (வயது 34) கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்தார்.

மா. சுப்ரமணியத்துக்கும், அவரது மனைவி மற்றும் இளைய மகன் அன்பழகனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தனர். சுப்ரமணியனின் மகன் அன்பழகன் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பிய நிலையில், உடல் நலக் குறைவு ஏற்பட்டு நேற்று  உயிரிழந்தார்.

இவரது மறைவு தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ. மா.பாலசுப்பிரமணியத்தின் மகன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மா.பாலசுப்பிரமணியத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் ஆறுதல் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து