முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தள்ளிவைக்கப்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கு புள்ளிகளை பிரித்து வழங்க ஐ.சி.சி. திட்டம்

வெள்ளிக்கிழமை, 23 அக்டோபர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய் : முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்றுள்ள 9 அணிகளும் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மொத்தம் 6 தொடர்களில் விளையாட வேண்டும். இந்திய அணி 4 தொடரில் ஆடி 360 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும் (296 புள்ளி), இங்கிலாந்து 3-வது இடத்திலும் (292 புள்ளி) உள்ளன. கொரோனா அச்சத்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 6 டெஸ்ட் தொடர் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.

மேலும் 9 தொடர் நடக்க வேண்டி உள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை திட்டமிட்டபடி நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவு செய்துள்ளது. மார்ச் மாதத்துக்குள் அனைத்து தொடர்களும் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

தற்போது தள்ளிவைக்கப்பட்ட தொடர்களை நடத்த முடியாத சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அந்த அணிகளுக்கு புள்ளிகளை பிரித்து அளிப்பது குறித்து ஐ.சி.சி. பரிசீலித்து வருகிறது.

ஒவ்வொரு தொடருக்கும் 120 புள்ளிகள் உண்டு. இவற்றை எந்த வகையில் கணக்கிட்டு பிரித்து கொடுப்பது என்பது குறித்து அடுத்த மாதம் நடக்கும் ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து