முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்

திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

அபுதாபி : ஐபிஎல் தொடரின் 45-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி குயின்டான் டி காக், இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

டி காக் 6 ரன்னிலும், இஷான் கிஷன் 37 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்னிலும் அவுட்டாகினர். அப்போது மும்பை இந்தியன்ஸ் 12.2 ஓவரில் 96 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா சிக்சர் மழை பொழிந்தார்.

இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 21 பந்தில் 7 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.உத்தப்பா 17 ரன்னிலும், ஸ்டீவ் ஸ்மித் 11 ரன்னிலும் அவுட்டாகினர். அப்போது ராஜஸ்தான் 2 விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்திருந்தது.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பென்ஸ்டோக்சுடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடினர். இந்த ஜோடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. சிறப்பாக ஆடிய ஸ்டோக்ஸ் சதமடித்தார்.

இறுதியில், ராஜஸ்தான் அணி 196 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஸ்டோக்ஸ் 107 ரன்னும், சஞ்சு சாம்சன் 54 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இது ராஜஸ்தான் அணி பெற்ற 5வது வெற்றி ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து