முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாமில் 10.52 லட்சம் பேர் விண்ணப்பம்: சாகு தகவல்

செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் நடந்த சிறப்பு முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10.52 லட்சம் பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளதாக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 16-ம்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற ஜனவரி 1-ம் தேதியை வாக்காளராகும் தகுதிக்கான நாளாக கொண்டு வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.  வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, திருத்தம், இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை எளிதில் பெற்றுக்கொள்வதற்காக கடந்த 21 மற்றும் 22-ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் கலந்து கொண்டு பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் (சட்டமன்ற தொகுதிக்குள் அல்லது தொகுதிக்கு வெளியே) ஆகியவற்றுக்காக பலர் விண்ணப்பித்தனர்.  இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

கடந்த 21-ம் தேதி நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர்களிடம் இருந்து கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக கணக்கிடப்பட்டு உள்ளன. அதில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக தமிழகம் முழுவதும் மொத்தம் 5 லட்சத்து 43 ஆயிரத்து 523 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. அவற்றில் பெயர் சேர்ப்புக்காக மட்டும் மொத்தம் 4 லட்சத்து 38 ஆயிரத்து 46 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  சேலம் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 25 ஆயிரத்து 817 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன. அவற்றில் பெயர் சேர்ப்புக்காக கொடுக் கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 106 ஆகும்.  சென்னையில் 23 ஆயிரத்து 856 விண்ணப்பங்களும் (பெயர் சேர்ப்புக்கு மட்டும் 18 ஆயிரத்து 637); திருவள்ளூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்து 389 விண்ணப்பங்களும் (பெயர் சேர்ப்புக்கு மட்டும் 17 ஆயிரத்து 59); காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8,998 விண்ணப்பங்களும் (பெயர் சேர்ப்புக்கு மட்டும் 7,560); செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 ஆயிரத்து 620 விண்ணப்பங்களும் (பெயர் சேர்ப்புக்கு மட்டும் 17 ஆயிரத்து 990) விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.  

இதேபோல் கடந்த 22-ம் தேதியன்று நடந்த சிறப்பு முகாமில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக மொத்தம் 8 லட்சத்து 3 ஆயிரத்து 384 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. அவற்றில் பெயர் சேர்ப்புக்காக மட்டும் 6 லட்சத்து 14 ஆயிரத்து 276 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.  சென்னையில் அதிகபட்சமாக 58 ஆயிரத்து 762 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன. அவற்றில் பெயர் சேர்ப்புக்காக கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 888 ஆகும். திருவள்ளூர் மாவட்டத்தில் 38 ஆயிரத்து 57 விண்ணப்பங்களும் (பெயர் சேர்ப்புக்கு மட்டும் 32 ஆயிரத்து 638), காஞ்சீபுரம் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 858 விண்ணப்பங்களும் (பெயர் சேர்ப்புக்கு மட்டும் 13 ஆயிரத்து 896), செங்கல்பட்டு மாவட்டத்தில் 36 ஆயிரத்து 196 விண்ணப்பங்களும் (பெயர் சேர்ப்புக்கு மட்டும் 30 ஆயிரத்து 543) விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 2 சிறப்பு முகாம்களிலும் மொத்தம் 10 லட்சத்து 52 ஆயிரத்து 322 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் டிசம்பர் மாதத்திலும் 2 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து