புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை வரை விடுமுறை நீட்டிப்பு

வியாழக்கிழமை, 26 நவம்பர் 2020      தமிழகம்
puducherry-2020 11 26

புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் 

நாளை வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் மையம் கொண்டிருந்த அதிதீவிர நிவர் புயல், புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரி உள்பட சில பகுதிகளில், மணிக்கு 120 முதல் 140 கி.மீ. வரையில் பலத்த காற்றும், கனமழையும் பெய்தது. 

இதனை தொடர்ந்து, நிவர் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்கிறது. அடுத்த 3 மணிநேரத்தில் தீவிர புயல், புயலாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நிவர் புயலால் புதுச்சேரியின் வடகிழக்கில் மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வரை வேகத்தில் பலத்த காற்று வீசியது. 

இதன்பின்னர் அடுத்த 3 மணிநேரத்தில் அதன் வேகம் மெல்ல குறைந்து 65 முதல் 75 கி.மீ. வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

நிவர் புயலால் புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து, நேற்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. எனினும், புயலை தொடர்ந்து பெய்து வரும் கனமழை, வீடுகள் மற்றும் கட்டிடங்களை சூழ்ந்து காணப்படும் வெள்ள நீர், மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை ( 28-ந் தேதி) வரை விடுமுறையை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து