இந்தியாவுக்கு எதிராக 2-வது போட்டியிலும் 62 பந்தில் சதம் அடித்த ஸ்மித்

ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2020      விளையாட்டு
Smith 2020 11 27

Source: provided

சிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் (83), ஆரோன் பிஞ்ச் ஆகியோர் அரைசதம் அடித்தனர். 

அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக விளையாடி 64 பந்தில் 14 பவுண்டரி, 2 சிக்சருடன் 104 ரன்கள் விளாசினார். 62 பந்தில் சதம் அடித்தார். ஏற்கனவே  நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியிலும் 62 பந்தில் சதம் அடித்து அதிகவேகமாக சதம் அடித்த 3-வது வீரர் என்ற சாதனையை பதிவு செய்திருந்தார். 

இந்த நிலையில் நேற்றும் 62 பந்தில் சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக ஸ்மித்தின் பேட்டிங் மிகவும் அபாரமாக உள்ளது. தற்போது அடுத்தடுத்து இரண்டு சதம் விளாசியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக கடைசி ஐந்து இன்னிங்சில் 69, 98, 131, 105, 104 ரன்கள் விளாசியுள்ளார். 

இந்தியா என்றாலே அபாரமான பேட்டிங் திறமையை ஸ்மித் வெளிக்காட்டி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து