கடைசி போட்டி மழையால் கைவிடல்: டி20 தொடரை 2-0 என வென்றது நியூசிலாந்து

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2020      விளையாட்டு
New-Zealand 2020-11-30

Source: provided

மவுன்ட் மவுங்கானு : நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று மவுன்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 2.2 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்திருக்கும்போது கனமழை பெய்தது. 

அதன்பின் போட்டி தொடங்க வாய்ப்பு இல்லாததால் போட்டி கைவிடப்பட்டது. இதனால் நியூசிலாந்து 2-0 எனத் தொடரை கைப்பற்றியது. 

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லூக்கி பெர்குசன் தொடர் நாயகன் விருதை பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து