Idhayam Matrimony

முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்துக்கு இன்னிங்ஸ் வெற்றி வாய்ப்பு: வெஸ்ட் இண்டீஸ் ‘பாலோஆன்’

சனிக்கிழமை, 5 டிசம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஹேமில்டன் : நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்று வருகிறது.

நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 519 ரன் குவித்து டிக்லெர் செய்தது. கேப்டன் வில்லியம்சன் இரட்டை சதம் (251 ரன்) அடித்து முத்திரை பதித்தார். தொடக்க வீரர் லாதம் 86 ரன் எடுத்தார்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ்  2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன் எடுத்திருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து ஆடியது.

நியூசிலாந்து அணியின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. வெஸ்ட் இண்டீஸ் 60 வது ஓவர்களில் 138 ரன்னில் சுருண்டது. இதனால் அந்த அணி பாலோஆன் ஆனது.

நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 35 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஜேமிசன், வாக்னர் தலா 2 விக்கெட்டும், போல்டு ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பாலோஆன் ஆன வெஸ்ட் இண்டீஸ் 381 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது.

2-வது இன்னிங்சிலும் அந்த அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. 89 ரன் எடுப்பதற்குள் வெஸ்ட் இண்டீஸ் 6-விக்கெட்டுகளை இழந்தது. பிளாக்வுட் ஒருவர் மட்டுமே தாக்குபிடித்து ஆடினார்.

இதனால் நியூசிலாந்து இந்த டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி செல்கிறது.

இந்த டெஸ்டில் வெற்றி பெறுவதன் மூலம் அந்த அணி 2 டெஸ்ட் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெறுகிறது. இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 11-ந் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து