பாலிவுட் நடிகை ராகுல் ப்ரீத்சிங்கிற்கு கொரோனா

செவ்வாய்க்கிழமை, 22 டிசம்பர் 2020      சினிமா
Rahul-Preet-Singh 2020 12 2

Source: provided

மும்பை : பாலிவுட் நடிகை ராகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளும் நடிகர்கள், நடிகைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸின் புது வகை வேறு பரவி வருவதால் பலரும் பயத்தில் இருக்கிறார்கள்.  கொரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கி, பல்வேறு முன்னணி நடிகர்களும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். அனைத்து படப்பிடிப்புகளுமே கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன்தான் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 

ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட தமன்னாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஐதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமாகி வீடு திரும்பிய சரத்குமார் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ராகுல் ப்ரீத் சிங். சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்று விட்டுத் திரும்பினார். தற்போது படப்பிடிப்புக்குச் செல்வதற்காக அவர் ஆயத்தமாகி வந்தார். இதனிடையே நடிகை ராகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு  உறுதியாகி உள்ளது. இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

எனக்கு  பரிசோதனையில் கொரோனா பாதிப்பு  உறுதியாகி உள்ளது. நான் என்னை தனிமை படுத்திக் கொண்டேன். நான் நன்றாக உள்ளேன்.  நான் ஓய்வுக்கு பிறகு விரைவில் நலமுடன் திரும்புவேன். தயவு செய்து என்னை சந்தித்தவர்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ளுங்கள். நன்றி அனைவரும் நலமுடன் பாதுகாப்பாக இருங்கள் என கூறி உள்ளார்.  ராகுலின் டுவீட்டை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும்  விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம். தைரியமாக இருங்கள். அது தான் இந்த நேரத்தில் ரொம்ப முக்கியம் என்று தெரிவித்துள்ளனர். ராகுல் ப்ரீத் சிங் தடையற தாக்க படத்தின் மூலம் அறிமுகமானார்.  தொடர்ந்து தீரன் அதிகாரம் படத்தில் நடித்தார். அதையடுத்து தேவ், என்.ஜி.கே படங்களில் நடித்தார்.இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் கைவசம் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து