எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை மற்றும் பரிசோதனை விறுவிறுப்பாக நடந்தது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டது. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ரஷ்யா, சீனா போன்று இந்தியாவிலும் தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. தற்போது இந்தியாவில் 4 தடுப்பூசி மருந்துகள் ஆய்வில் உள்ளன. இந்த தடுப்பூசிகளை இந்தியாவில் எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி மத்திய அரசு விரிவான திட்டங்களை வகுத்துள்ளது.
கொரோனா தடுப்பூசி மருந்துகளை அதிகபட்ச குளிர்பதன சேமிப்பு கிடங்குகளில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். அத்தகைய சேமிப்பு கிடங்குகள் நாடுமுழுவதும் எத்தனை இடங்களில் உருவாக்க முடியும் என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அந்த சேமிப்பு கிடங்குகளில் இருந்து தடுப்பூசி மருந்துகளை எப்படி வினியோகம் செய்வது என்பது பற்றியும் முழுமையான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதே போன்று முதல் கட்டமாக 30 கோடி பேருக்கு தடுப்பூசி மருந்து போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள், நர்சுகள், முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும். அதன்பிறகு பதிவு செய்து கொள்ளும் பொதுமக்களுக்கு தடுப்பூசி வினியோகம் செய்யப்படும்.
முன்கள பணியாளர்கள், டாக்டர்கள், நர்சுகளில் யார் யாருக்கு தடுப்பூசி தேவை என்ற பட்டியல் மாநில வாரியாக தயாரிக்கப்பட்டுள்ளது. எல்லா மாநிலங்களில் இருந்தும் தேர்தல் சமயத்தில் வாக்கு சாவடிகளுக்கு வாக்காளர்களை வரவழைப்பதுபோல திட்டமிட்டு ஆங்காங்கே மையங்களில் தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் திட்டத்தில் எத்தகைய குழப்பமும் வந்து விடக் கூடாது என்பதற்காக 2 நாட்கள் ஒத்திகையை செய்து பார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஆந்திரா, பஞ்சாப், குஜராத், அசாம் ஆகிய 4 மாநிலங்களில் நேற்று (திங்கட்கிழமை) தடுப்பூசி பரிசோதனை ஒத்திகை தொடங்கியது. இந்த 4 மாநிலங்களிலும் தலா 2 மாவட்டங்களில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 மையங்கள் இதற்காக உருவாக்கப்பட்டு இருந்தன. இந்த மையங்களில் தலா 25 பேர் வீதம் சுமார் 100 பேருக்கு தடுப்பூசி பரிசோதனை ஒத்திகை நடத்தப்பட்டது. தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் அந்தந்த மையங்களில் காலையிலேயே வரவழைக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் தயார் நிலையில் அமர்த்தப்பட்டனர். தடுப்பூசி சேமித்து வைக்கப்படும் மையத்தில் இருந்து ஒத்திகை நடைபெறும் இடத்திற்கு எவ்வளவு மணி நேரத்தில் தடுப்பூசி மருந்து வந்து சேருகிறது என்ற நேரம் கணக்கிடப்பட்டது.
இந்த இடைப்பட்ட காலத்தில் மருந்தின் குளிர்பதன தன்மை ஆய்வு செய்யப்பட்டது. ஒத்திகை நடைபெறும் இடத்துக்கு வந்ததும் மீண்டும் தடுப்பூசி மருந்து பற்றிய உறுதி தன்மை சோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டிருந்த பயனாளிகளுக்கு தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது.
அதிகாரப்பூர்வ தடுப்பூசி மருந்து இன்னும் அமலுக்கு வராததால் மாதிரி தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது. அதன்பிறகு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அந்த மையத்தில் சுமார் 30 நிமிடம் உட்கார வைக்கப்பட்டனர். 30 நிமிடங்களில் எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு பயனாளிகள் புறப்பட்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். 4 மாநிலங்களிலும் இத்தகைய அடிப்படையில் நேற்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை விறுவிறுப்பாக நடத்தப்பட்டது. அசாம் மாநிலத்தில் சோனித்பூர், நல்பாரி மாவட்டங்களில் இந்த சோதனை நடந்தது. ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் 5 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை நடந்தது.
விஜயவாடா அரசு மருத்துவமனை, உப்பலூர் ஆரம்ப சுகாதார நிலை யம், பூர்ணா ஹார்ட் இன்ஸ்டிடியூட், பெனமலூர் அரசு மருத்துவமனை, பிரகாஷ் நகர் ஆரம்ப சுகாதார மையத்தில் இது நடைபெற்றது. ஒவ்வொரு மையத்திலும் 25 பேருக்கு டம்மி கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது. இதற்காக ஏற்கனவே தேர்ந்து எடுக்கப்பட்ட தன்னார்வலர்கள் அழைத்து வரப்பட்டு இருந்தனர். தடுப்பூசி ஒத்திகை மையங்கள் அனைத்திலும் 4 அறைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டு இருந்தன.
தடுப்பூசி செலுத்த வருபவர்களுக்கு ஆரம்பகட்ட பரிசோதனை, பதிவு செய்தல், தடுப்பூசி செலுத்தும் இடம் மற்றும் தடுப்பூசி செலுத்திய பின்னர் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா? என்பதை அறிய தங்கும் அறைகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. ஒவ்வொரு அறையிலும் மருத்துவ அதிகாரிகள், டாக்டர் உள்பட 5 பேர் கண்காணித்தனர். இந்த தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு அது சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு: மாவட்ட செயலாளர்களுடன் விஜய் இன்று ஆலோசனை
09 Feb 2026சென்னை, சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு குறித்து மாவட்ட செயலாளர்களுடன் இன்று த.வெ.க. தலைவர் விஜய் ஆலோசனை நடத்துகிறார்.
-
தங்கம், வெள்ளி விலை உயர்வு
09 Feb 2026சென்னை, வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்து விற்பனையானது.
-
மத்திய அரசை கண்டித்து வேலைநிறுத்தம்: வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு
09 Feb 2026சென்னை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், வி.சி.க.
-
தமிழகத்தில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் சட்டசபை தேர்தலா..? பா.ஜ.க. நிர்வாகி சூசக தகவலால் பரபரப்பு
09 Feb 2026சென்னை, தமிழகத்தில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக பா.ஜ.க. தேசிய அமைப்புச் செயலர் பி.எல்.
-
நான் பேசுவதை கேட்டுத்தான் அவைக்கு வர பிரதமர் பயந்தார்: ராகுல் காந்தி விமர்சனம்
09 Feb 2026புதுடெல்லி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது மக்களவையில் நான் பேசியதை கண்டு பிரதமர் மோடி அவைக்கு வர பயந்தார் என்று ராகுல் காந்தி
-
பொது நிதிகள் குறித்து மக்களவைக்கு பிரதமர் அலுவலகம் முக்கிய உத்தரவு
09 Feb 2026புதுடெல்லி, பி.எம்.
-
சரியான நேரத்தில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்போம் அமைச்சர் எஸ்.ரகுபதி தகவல்
09 Feb 2026சென்னை, சரியான நேரம் வரும்போது தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவை அமைப்போம், பேச்சுவார்த்தையை ஸ்டாலின் சுமுகமாக முடிப்பார் என்று இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.
-
குரூப் 2, 2ஏ தேர்வில் குளறுபடி எதிரொலி: டி.என்.பி.எஸ்.சி. புதிய கட்டுப்பாட்டு அலுவலராக வெங்கடபிரியா நியமனம்
09 Feb 2026சென்னை, தமிழ்நாடு முழுவதும் நடக்க இருந்த டி.என்.பி.எஸ்.சி.
-
தணிக்கை மறு ஆய்வுக் குழுவுக்கு சென்ற ஜனநாயகன் திரைப்படம்..! விரைவில் தீர்வு கிடைக்க வாய்ப்பு
09 Feb 2026சென்னை, ஜனநாயகன் படத்தை தணிக்கை மறு ஆய்வுக் குழுவுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –09-02-2026
09 Feb 2026 -
20 வயது குறைந்திருக்கிறது: செங்கோட்டையன் பேச்சு
09 Feb 2026கோவை, எனக்கு இப்போது 20 வயது குறைந்திருக்கிறது. இளைஞராக ஓடுவதற்கு த.வெ.க. தலைவர் விஜய் என்னை தயார்படுத்தி இருக்கிறார் என்று கோவையில் நடந்த த.வெ.க.
-
என்.சி.பி. மூத்த தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி
09 Feb 2026புனே, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் நேற்று பிற்பகல் புனேவில் உள்ள ரூபி ஹால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
தமிழகத்தில் திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் விரைவில் புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
09 Feb 2026சென்னை, தமிழ்நாட்டில் திருநெல்வேலி, திருச்சி, தருமபுரி, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலையில் 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.
-
பா.ம.க.-வின் தலைவர் அன்புமணிதான்: டெல்லி நீதிமன்றத்தில் மீண்டும் உறுதிசெய்த தேர்தல் ஆணையம்
09 Feb 2026டெல்லி, பா.ம.க.வின் தலைவர் அன்புமணிதான் என்று டெல்லி நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி செய்த நிலையில், இந்த நடவடிக்கை ராமதாஸ் தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
-
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் பக்ரீத், ரம்ஜான் நாட்களில் மட்டும் தொழுகை நடத்துவதற்கு அனுமதி: ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்
09 Feb 2026புதுடெல்லி, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்கா தொடர்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ரம்ஜான், பக்ரீத் ஆகிய பண்டிகை நாட்களில் மட்டும் தர்காவில் தொழுகை நடத்த அன
-
கொடிக் கம்பங்களை அகற்றும் விவகாரம்: 13 மாவட்ட கலெக்டர்கள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
09 Feb 2026மதுரை, கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடர்பாக 13 மாவட்ட கலெக்டர்களுக்கு மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
09 Feb 2026- இராமேஸ்வரம் சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் பவனி.
- களக்காடு சக்திவாசீசுவர் தெப்பம்.
- திருமயம் ஆண்டாள் செளரி திருமஞ்சனம்.
-
இன்றைய ராசிபலன்
09 Feb 2026 -
இன்றைய நாள் எப்படி?
09 Feb 2026


