எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழகத்தில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக பா.ஜ.க. தேசிய அமைப்புச் செயலர் பி.எல். சந்தோஷ் சூசகமாகக் கூறியிருக்கிறார்.
சென்னையில் நேற்று பா.ஜ.க. தேசிய அமைப்புச் செயலர் பி.எல். சந்தோஷ் தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பி.எல். சந்தோஷ், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் 65 நாள்கள்தான் இருக்கிறது. முதல்கட்டமாகவே தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலில் பா.ஜ.க. அதிக தொகுதிகளில் போட்டியிடவிருப்பதால் தேர்தல் போட்டி கடுமையாக இருக்கும்.
மூத்த நிர்வாகிகள் தங்களை மட்டும் முதன்மைப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பா.ஜ.க.வில் நியமித்த தேர்தல் பொறுப்பாளர்கள் அவர்களுக்கான தொகுதிகளில் ஆர்வத்துடன் பணியாற்ற வேண்டும். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க. முக்கியத் தலைவர்கள் நயினார் நாகேந்திரன், எல். முருகன், தமிழிசை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேர்தல் தொகுதி பொறுப்பாளர் பதவியிலிருநது விலகுவதாக அறிவித்த அண்ணாமலை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


