சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டி - மம்தா பானர்ஜி அறிவிப்பு

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021      இந்தியா
Mamta 2020 12 14

Source: provided

கொல்கத்தா : தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், மாநில மற்றும் தேசிய கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 

குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க மாநில முதல்-மந்திரியும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க.வும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மாநில முதல்-மந்திரியும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி பேசுகையில், நான் நந்திகிராம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார். முடிந்தால் நான் பவானிபூர் மற்றும் நந்திகிராம் இரண்டிலிருந்தும் போட்டியிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் மந்திரி சுவேந்து ஆதிகாரி, கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து