ராணுவ ரகசியங்கள் கசிந்த விவகாரம் : தீவிர விசாரணை கோரும் ராகுல்காந்தி

புதன்கிழமை, 20 ஜனவரி 2021      இந்தியா
Rahul- 2020 11 11

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் ராகுல்காந்தி கூறியதாவது:- 

இந்தியாவின் ராணுவ ரகசியங்கள் ஒரு பத்திரிகையாளருக்கு கொடுக்கப்பட்டது கிரிமினல் நடவடிக்கை. இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதியில் நடத்திய பாலகோட் தாக்குதல் மற்றும் புல்வாமா பகுதியில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான, ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ்ஆப் உரையாடல், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. 

இந்திய ராணுவத்தின் ரகசியங்களை ஒரு பத்திரிகையாளருக்கு கசிய விட்டிருப்பது கிரிமினல் நடவடிக்கை . தகவல்களை வெளியிட்டவர் மற்றும் பெற்றுக் கொண்டவர் என இரு தரப்பின் மீது வழக்குப்பதிய வேண்டும்.

பிரதமர், உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள், விமானப்படை தளபதி, தேசிய பாதுகாப்பு அமைப்பிற்கு மட்டுமே, பாலகோட் தாக்குதல் தொடர்பான தகவல்களை தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து