முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் காமராஜ் உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை நிர்வாகம் தகவல்

புதன்கிழமை, 20 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் உணவுத்துறை அமைச்சா் காமராஜ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு எம்.ஜி.எம். ஹெல்த்கோ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அமைச்சர் காமராஜின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டதில் நுரையீரல் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என்று கூறியுள்ளனர்.   

தமிழக உணவுத்துறை அமைச்சா் காமராஜ் (60) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 6-ம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். தொடா் சிகிச்சையை அடுத்து அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதன்பின், பொங்கலுக்கு முன்னதாக, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாா்.  இந்த நிலையில் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு ஆக்சிஜன் அளவு 61-க்கு கீழ் சென்றது. அதனால் செவ்வாய்க்கிழமை உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா்.  இதற்கிடையே, நுரையீரல் செயல்பாட்டுக்காக, உயிா்காக்கும் எக்மோ தெரபி சிகிச்சை தேவை என மருத்துவா்கள் தெரிவித்தனா். அந்த சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் இல்லாத நிலையில், எம்.ஜி.எம்., ஹெல்த்கோ் மருத்துவமனையில் அமைச்சா் காமராஜ் செவ்வாய்க்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டாா். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து