முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு

வெள்ளிக்கிழமை, 22 ஜனவரி 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சேலம் : ஆஸ்திரேலியா வெற்றிக்குப் பிறகு நாடு திரும்பிய சேலம் சின்னப்பம்பட்டி கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி சாந்தா. இவர்களுக்கு நடராஜன், சக்திவேல் ஆகிய இரு மகன்களும், திலகவதி, தமிழரசி, மேகலா, என்ற மூன்று மகள்களும் உள்ளனர்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் நடராஜன். அவர் தன் குடும்பத்தின் மூத்த மகனாவார். இவரது தந்தை கூலி வேலை செய்து வருகிறார். தாய் சாந்தா அந்த கிராமத்தில் சில்லி சிக்கன் கடை நடத்தி வந்துள்ளார். தனது திறமை மற்றும் விடாமுயற்சியால் மாவட்ட மற்றும் தமிழக அளவில் கிரிக்கெட் வீரர் நடராஜன் இடம் பெற்று விளையாடியுள்ளார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பிய அவர் பெங்களூரு விமான நிலையத்திலிருந்து கார் மூலம் சொந்த ஊரான சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டிக்கு மாலை 5 மணி அளவில் வந்தார்.

அங்கு அவரது கிரிக்கெட் அகடமி நிர்வாகிகள் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள், செண்டை மேளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

காரிலிருந்து இறங்கிய நடராஜன் அங்கு ஏற்கனவே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து செல்லப்பட்டார். சந்தப்பேட்டை பகுதியிலிருந்து அவரது வீடு வரைக்கும் சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

அப்போது அங்கு திரண்டிருந்த ஊர் பொதுமக்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களை பார்த்து கையசைத்து இரு கை கூப்பி வணங்கி தனது மகிழ்ச்சியினை தெரிவித்து நன்றி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து