முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேல் தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு மு.க. ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார்- தமிழக பா.ஜ.க .தலைவர் முருகன் கிண்டல்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

ராசிபுரம் - வேல் தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் கூறினார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பா.ஜ.க. சார்பில் அணி பிரிவு மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டார். மாநாட்டில் அவர் பேசியதாவது:-

தி.மு.க. தலைவர் ஸ்டாலினையே வேல் தூக்க வைத்ததுதான் பா.ஜ.க. நடத்திய வேல் யாத்திரையின் வெற்றி. முருகனின் வேலை ஸ்டாலின் ஏந்தியுள்ளார். மிக விரைவில் முருகனின் வேல் தி.மு.க.வை விரட்டியடிக்கும். வேல் தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வினர் அதிகப்படியாக சட்டமன்றம் செல்வார்கள். தமிழகம் முழுவதும் பிப்ரவரி மாதத்தில் பா.ஜ.க. மாநாடு நடைபெறும். 

தமிழகத்தில் பா.ஜ.க. சார்பில் வேல் யாத்திரை நடத்தப்பட்டு அதன் மூலம் தைப்பூச விழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என மாநில பா.ஜ.க. சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று தமிழக அரசு தைப்பூச திருவிழாவை பொது விடுமுறை நாளாக அறிவித்தது வரவேற்புக்குரிய ஒன்றாகும். இதற்கு தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்து மத வழிபாட்டை தவறாக பேசியவர்களுக்கு உரிய பாடம் வேல் யாத்திரை மூலம் புகட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து