முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் டி-20 கிரிக்கெட் போட்டி: ஆஸி.யை 53 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி

திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

நியூசிலாந்து : ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவை 53 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் மார்ட்டின் கப்தில் (0), செய்ஃபெர்ட் (1) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 12 ரன்னில் வெளியேறினார். இதனால் 19 ரன்கள் எடுப்பதற்குள் நியூசிலாந்து 3 விக்கெட்டை இழந்தது. 

அதன்பின் வந்த தேவன் கான்வே ஆட்டமிழக்காமல் 59 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் விளாச நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. டேனில் சாம்ஸ், ஜய் ரிச்சர்ட்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. நியூசிலாந்து அணியின் துல்லியமான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களால் ரன்கள் குவிக்க இயலவில்லை. 

தொடக்க வீரர் மேத்யூ வடே 12 ரன்னிலும், ஆரோன் பிஞ்ச் 1 ரன்னிலும், ஜோஷ் பிலிப்ஸ் 2 ரன்னிலும் வெளியேறினர். மிட்செல் மார்ஷ் 33 பந்தில் 45 ரன்கள் விளாசினார். அதன்பின் வந்த கிளென் மேக்ஸ்வெல் 1 ரன்னிலும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 8 ரன்னிலும் வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலியா 17.3 ஓவரில் 131 ரன்னில் ஆல்அவுட் ஆனது, இதனால் நியூசிலாந்து 53 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியின் இஷ் சோதி 4 விக்கெட்டும் டிம் சவுத்தி மற்றும் டிரென்ட் போல்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து