புதுச்சேரி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை - என்.ரங்கசாமி

திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2021      இந்தியா
Rangasamy-2021-02-22

Source: provided

புதுச்சேரி : காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமாவைத் தொடர்ந்து பேரவையில் பலமிழந்த ஆளும் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவா் என்.ரங்கசாமி தலைமையில் ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதை பரிசீலித்த துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பேற்ற தமிழிசை செளந்தரராஜன், முதல்-மந்திரி நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டப்பேரவையைக் கூட்டி, பிப். 22-ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார். 

அதன்படி புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசிய நாராயணசாமி, மத்திய பா.ஜ.க. மற்றும் புதுச்சேரி எதிர்க்கட்சிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் தீர்மானம் மீது வாக்களிக்காமல் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளியேறியதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் தீர்மானம் தோல்வியடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். 

இதனால் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து, தனது ராஜிநாமா கடிதத்தை நாராயணசாமி அளித்தார். 

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவா் என்.ரங்கசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

புதுச்சேரி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தினோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து