முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் உள்ளாட்சித் தேர்தல்: அனைத்து மாநகராட்சிகளிலும் பா.ஜ.க.முன்னிலை

செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

அகமதாபாத் : குஜராத் மாநிலத்தில் 6 மாநகராட்சிகளுக்கான தேர்தலில் ஆளும் பா.ஜ.க. பெரும்பாலான வார்டுகளில் முன்னிலை வகித்துள்ளது. 

குஜராத் மாநிலத்தில், அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் மற்றும் பாவ் நகர் மாநகராட்சி தேர்தல் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. கடந்த பல ஆண்டுகளாக இந்த மாநகராட்சிகள் பா.ஜ.க.விடம் இருந்து வருகிறது. 6 மாநகராட்சிகளிலும் மொத்தம் 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இது தவிர ஜூனாகத் மாநகராட்சியில் நடக்கும் 2 இடங்களுக்காக நடக்கும் இடைத்தேர்தலில் 9 பேர் போட்டியிட்டனர். 

இந்த நிலையில் 6 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.  தொடக்கம் முதலே பா.ஜ.க. பல வார்டுகளில் முன்னிலை பெற்றது. மொத்தமுள்ள 576 வார்டுகளில் ஆளும் பா.ஜ.க. 263 வார்டுகளில் முன்னிலை பெற்றது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 56 வார்டுகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளதாக தெரிகிறது.

இதர கட்சிகள் 19 இடங்களில் முன்னிலை பெற்று இருந்தன. அம்மாநிலத்தின் மிகப்பெரிய மாநகராட்சியான அகமதாபாத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 192 இடங்களில் 82 வார்டுகளில் பா.ஜ.க. முன்னிலை பெற்றது.  காங்கிரஸ் 16 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றது.  அதே போல ராஜ்கோட் மாநகராட்சியில் மொத்தமுள்ள 72 இடங்களில் 56 வார்டுகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.

மேலும் 12 இடங்களில் பா.ஜ.க. முன்னிலையிலும்,  காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே முன்னிலையிலும் இருந்தன.  சூரத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 120 இடங்களில் 51 வார்டுகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. வதோதரா மாநகராட்சியில் மொத்தமுள்ள 76 இடங்களில் 33 வார்டுகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. ஜாம்நகரில் 40 வார்டுகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. பாவ் நகர் மாநகராட்சியிலும் பா.ஜ.க.வே முன்னிலை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து