வாஷிங்டன் : அமெரிக்காவில் பணி நிமித்தமாக குடியேறும் வெளிநாட்ட வர்கள் அந்நாட்டு குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பித்து தேர்வு எழுத வேண்டும். இந்நிலையில், வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேறுவதை குறைக்க டிரம்ப் நிர்வாகம் தேர்வு முறைகளைக் கடுமையாக்கியது.
தேர்வில் 100 கேள்விகள் என்று இருந்ததை 128 கேள்விகளாக உயர்த்தியது. இந்தக் கேள்விகள் பெரும்பாலும் அரசியல் ரீதியிலானதாகவும் கடுமையாகவும் இருந்தன. இந்த விதிமுறைகள் 2020 டிசம்பர் 1-க்குப் பிறகு குடியுரிமை கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு பொருந்தும் எனக்கூறப்பட்டது.
இந்நிலையில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோபைடன் நிர்வாகம் இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவெடுத்துள்ளது. எனவே இனி 2008-ம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேர்வு முறைகள் மீண்டும் தொடர உள்ளது. அமெரிக்காவில் அதிகஅளவில் குடியுரிமை பெறும்வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் 2-வது இடத்தில் உள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.