சசிகலாவின் அழைப்பு அ.தி.மு.க.வுக்கு அல்ல: அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

புதன்கிழமை, 24 பெப்ரவரி 2021      தமிழகம்
jayakumar-2020 11 05

Source: provided

சென்னை : சசிகலாவின் அழைப்பு அ.ம.மு.க.வுக்குத்தான் பொருந்தும், அ.தி.மு.க.வுக்கு அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் நேற்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது.  அந்த வகையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சென்னை தியாகராயநகர் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சசிகலா பேசுகையில், 

ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். விரைவில் தொண்டர்கள், பொது மக்களையும் சந்திக்க உள்ளேன். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களுக்கு நான் துணை நிற்பேன். தொண்டர்கள் ஒன்றாக இணைந்து மீண்டும் ஆட்சி தொடர வேண்டும் என்பதே விருப்பம் என்று கூறினார்.

இந்த நிலையில் சசிகலாவின் பேச்சு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

சசிகலாவின் அழைப்பு அ.ம.மு.க.வுக்குத்தான் பொருந்தும், அ.தி.மு.க.வுக்கு அல்ல. சசிகலா விடுத்த அழைப்பு அ.தி.மு.க.விற்கு பொருந்தாது. சமத்துவ மக்கள் கட்சி அ.தி.மு.க. கூட்டணியில்தான் உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து