பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறார்! துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற நடிகர் அஜீத்துக்கு ஓ.பி.எஸ். பாராட்டு

திங்கட்கிழமை, 8 மார்ச் 2021      சினிமா
ops-2021-03-08

பைக் ரேஸ், கார் ரேஸ் ஆகியவற்றில் ஆர்வம் கொண்ட அஜித், சமீபமாகத் துப்பாக்கி சுடுதல் போட்டியின் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார். இதற்காகப் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் சென்னை துப்பாக்கி சுடுதல் கிளப்புக்குச் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.  இந்நிலையில், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து சுமார் 900-க்கும் மேற்பட்டோர் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். இதில் சென்னை ரைபிள் கிளப் அணி பல்வேறு பதக்கங்களைக் குவித்தது. சென்னை ரைபிள் கிளப்பின் உறுப்பினரான நடிகர் அஜித் அவர்கள் 6 பதக்கங்களை வென்றார். 

இந்த நிலையில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்து வரும் அன்புச்சகோதரர் அஜீத்குமார், சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து