முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி.யின் செயலால் சர்ச்சை

புதன்கிழமை, 5 நவம்பர் 2025      விளையாட்டு
5-Ram-98-1

Source: provided

மகளிர் ஒரு நாள் உலக கோப்பைத் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்குப் பங்காற்றிய தொடக்க ஆட்டக்காரர் பிரதிகா ராவலுக்கு பதக்கம் வழங்காத சம்பவம் சர்ச்சையாகியுள்ளது. மகளிருக்கான 13-வது ஒரு நாள் உலகக் கோப்பைத் தொடர் இறுதி ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் திடலில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது.

போட்டிக்குப் பின்னர், இந்திய அணி வீராங்கனைகள், அணி நிர்வாகிகள், ரசிகர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியில் திளைத்தனர். இந்திய அணிக்கு கோப்பை வழங்கியபோது இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் பிரதிகா ராவல், மூவர்ணக்கொடியைப் போர்த்திக் கொண்டு, கட்டுடன் சக்கர நாற்காலியில் வந்து கலந்துகொண்டார். முன்னதாக லீக் சுற்றுப் போட்டியின்போது வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங் செய்தும் வலது காலில் காயம் ஏற்பட்டு தொடரில் இருந்து வெளியேறினார். போட்டிக்குப் பின்னர் இந்திய அணிக்கு வெற்றிக்கோப்பையும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. இந்த நிலையில், உலகக் கோப்பைத் தொடரில் 308 ரன்கள் எடுத்த பிரதிகா ராவலுக்கு, சாம்பியனுக்கான பதக்கத்தை ஐ.சி.சி. வழங்காதது சர்ச்சையை எழுப்பியுள்ளது. 

மெஸ்ஸி குறித்து ரொனால்டோ 

கால்பந்தாட்ட உலகில் 2 பெரும் ஜாம்பவான்களாக விளங்குபவர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றொருவர் லியோனல் மெஸ்ஸி. இருவரையும் ஒப்பிட்டு ரசிகர்கள் அவ்வப்போது விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம். விளையாட்டைத் தாண்டி இவ்விருவர் உலக ஐகானாக விளங்குகின்றனர். மெஸ்ஸி என்னை விட சிறந்த வீரர் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொடுத்த நேர்காணல் ஒன்றில் பேசிய ரொனால்டோ, "உலக கோப்பை வெல்வது என் கனவு கிடையாது. வரலாற்றில் சிறந்த வீரரை வரையறுக்க உலக கோப்பை வேண்டுமா? ஒரு தொடரின் 6 அல்லது 7 போட்டிகளில் மட்டும் வென்றால் அவர் சிறந்த வீரர் என்பது நியாயம் என்று நினைக்கிறீர்களா? மெஸ்ஸி என்னை விட சிறந்த வீரரா? அந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை" என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து