வளிமண்டல சுழற்சி எதிரொலி தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

புதன்கிழமை, 7 ஏப்ரல் 2021      தமிழகம்
Weather-Center 2020 12-01

Source: provided

சென்னை : வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

குமரிக்கடல் பகுதியில் உருவாகவுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் 9 முதல் 11 ஆம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். இரண்டு நாட்கள் தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட கால நிலை காணப்படும். நாமக்கல், கரூர் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி உயர்ந்து காணப்படும். 

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை அதிகபட்சம் 35 டிகிரி, குறைந்தது 26 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கும் என கூறப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் வெப்பநிலை உயரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், நேற்று தமிழகத்தின், திண்டுக்கல், திருச்சி, மதுரை, கரூர், ஆகிய 4 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும்.

ஏனைய உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1 டிகிரி முதல் 2 செல்ஸியஸ் வரை உயரக்கூடும். கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட ஒட்டி இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து