2-வது டோஸ் போட்டு கொண்டார் பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானி

வியாழக்கிழமை, 8 ஏப்ரல் 2021      இந்தியா
advani-2021-04-08

பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை நேற்று போட்டுக்கொண்டார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில், கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதில் 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.   அந்த வகையில், பா.ஜ.க. மூத்த தலைவரான எல்.கே. அத்வானி கடந்த மாதம் 9-ம் தேதி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டார். 

இந்நிலையில், சுமார் ஒரு மாதம் கழித்து எல்.கே. அத்வானி கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை நேற்று போட்டுக்கொண்டார். 93 வயதான எல்.கே. அத்வானிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து