இந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை விதிப்பு

Airlines 2021 04 26

Source: provided

மணிலா : பிலிப்பைன்ஸ் மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இந்திய பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்திய பயணிகளுக்கு வரும் வியாழக்கிழமையில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக, அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இந்தியாவில் இருந்து வரும் அனைத்துப் பயணிகள், பிலிப்பைன்சில் நுழைய தடை விதிக்கப்படுகிறது. மற்றும் கடந்த 14 நாட்களாக இந்தியாவில் இருந்து வந்த பயணிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக இந்த தடை வரும் மே 14 வரை கடைப்பிடிக்கப்படும் என்று அந்த நாட்டு சுகாதாரத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

பிலிப்பைன்ஸ் போல கம்போடியா நாட்டிலும் இந்திய பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய பயணிகள் மற்றும் இந்தியா வழியாக வரும் வேறு நாட்டு பயணிகளுக்கும் கம்போடியாவில் நுழைய மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்படுகிறது.

கடந்த 3 வாரங்களில் இந்தியா சென்று திரும்பிய எந்த பயணியும் கம்போடியாவில் நுழைய முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து