எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பிரேசிலியா: இறுதி ஆட்டத்தில் பிரேசிலை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டீனா 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோபா அமெரிக்கா கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றி மூலம் மெஸ்யின் கனவும் நனவாகியுள்ளது. அணி கேப்டனாக இருந்து அவர் பெற்றுத் தரும் முதல் கோபா கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசில் ஆதிக்கம்...
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது. பிரேசிலிலுள்ள மரக்காணா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே பிரேசில் ஆக்ரோஷம் காட்டி வந்தது. எனினும், 22-வது நிமிடத்தில் அர்ஜென்டீனா வீரர் ரோட்ரிகோ டி பால் ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார்.
அர்ஜென்டீனா...
முதல் பாதி ஆட்டத்தில் மேற்கொண்டு கோல் விழாததால் அர்ஜென்டீனா 1-0 என முன்னிலை வகித்தது. 2-வது பாதி ஆட்டத்தில் பிரேசில் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரேசில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர் முதல் கோலுக்கு கடுமையாக முயற்சித்தார்.
கூடுதல் நேரம்...
எனினும், அர்ஜென்டீனா சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. பிரேசில் அணியால் கூடுதல் நேரத்திலும் கோல் அடித்து சமன் செய்ய முடியவில்லை. இதன்மூலம், அர்ஜென்டீனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் ஆனது.
15-வது முறை...
கோபா அமெரிக்கா கோப்பையை அர்ஜென்டீனா வெல்வது இது 15-வது முறை. அர்ஜென்டீனாவுக்கு லயோனல் மெஸ்ஸி பெற்று தரும் முதல் பெரிய சர்வதேச கோப்பை இது.
BOX - 1
தங்க காலணி விருது
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அதிக கோல்களை அடித்த லயோனல் மெஸ்ஸிக்கு தங்க காலணி விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்டதில் மெஸ்ஸி எந்த கோலும் போடவில்லை. இருப்பினும் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய மெஸ்ஸி அடித்த கோல்களின் மொத்த எண்ணிக்கை 4. இதற்காக அவருக்கு தங்க காலணி விருது வழங்கப்பட்டிருக்கிறது.
0000000000
BOX - 2
மரடோனாவுக்கு அர்ப்பணிப்பு
கோபா அமெரிக்க கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா வீரர்கள் இந்த வெற்றியை மறைந்த மரடோனாவுக்கு அர்ப்பணித்துள்ளனர். கால்பந்தின் ஜாம்பவான் மரடோனா. அவரது தலைமையில் அர்ஜென் டினா 1986-ல் உலக கோப்பையை கைப்பற்றியது.
மரடோனா வழியில் தான் மெஸ்சி உலகின் சிறந்த கால் பந்து வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். இந்த நிலையில் கோபா அமெரிக்க கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா வீரர்கள் இந்த வெற்றியை மறைந்த மரடோனாவுக்கு அர்ப்பணித்துள்ளனர்.
00000000
BOX - 3
நெய்மர் கண்ணீர்
கடைசி விசில் அடிக்கப்பட்டவுடன் மைதான ஸ்க்ரீன் அர்ஜெண்டீனா சாம்பியன், லியோனல் மெஸ்ஸி சாம்பியன் என்று ஒளிர்ந்தது. நெய்மாரினால் கண்ணீரை அடக்க முடியவில்லை மண்டியிட்டு கண்ணீர் விட்டுக் கதறியது ட்ரெண்டிங் ஆகியுள்ளது.
இந்த வெற்றி அர்ஜெண்டீனாவின் 15வது கோப்பா அமெரிக்கா சாம்பியன் பட்டமாகும். உருகுவேயுடன் சமன் செய்துள்ளது. இந்த வெற்றியுடன் 20 போட்டிகளில் தோற்காமல் ஒரு தொடர்ச்சியை அர்ஜெண்டீனா கடைப்பிடித்து வருகிறது. 2018 உலகக்கோப்பையில் பெல்ஜியமிடம் தோற்று பிரேசில் வெளியேறிய பிறகு ஒரு மேஜர் தோல்வியை அர்ஜெண்டீனா பிரேசிலுக்கு பரிசாக அளித்துள்ளது.
0000000000
BOX - 4
மெஸ்ஸி ஆறுதல்
நெய்மருக்கு மெஸ்ஸி ஆறுதல் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரேசில் கேப்டன் நெய்மார் மைதானத்தில் குலுங்கிக் குலுங்கி அழுதார். நடுவர் இறுதிவிசில் அடித்ததும் மைதானத்தில் அர்ஜெண்டீனா வீரர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் திளைத்திருந்தனர்.
பிரேசில் வீரர் நெய்மர் , மெஸ்ஸியை நோக்கி வந்தார். மெஸ்ஸி, நெய்மரை ஆரத்தழுவி அவருக்கு ஆறுதல் சொன்னார். அதேநேரத்தில் வெற்றிக்கொண்டாட்டத்தில் இருந்த தனது அணி வீரர்களில் முதுகில் தட்டிக்கொடுத்த மெஸ்ஸி. நெய்மரை ஆரத்தழுவி ஆறுதல் கூறிய காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்று தீபாவளி பண்டிகை: எண்ணெய் குளியல் எடுக்க உகந்த நேரம்!
19 Oct 2025சென்னை, தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் (நல்லெண்ணெய் குளியல்) செய்ய உகந்த நேரம் எது என்பகு குறித்த தகவலை பார்ப்போம்.
-
சென்னையில் இருந்து புறப்பட்ட பெங்களூர் விமானத்தில் திடீர் எந்திர கோளாறு
19 Oct 2025சென்னை, சென்னையில் இருந்து பெங்களூருக்கு நேற்று காலை 10.45 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது.
-
மாதாந்திர பூஜைக்காக நடைதிறப்பு: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்
19 Oct 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
-
தீபாவளி கொண்டாட்டம்: பட்டாசு வெடிக்கும்போது நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்
19 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இனிப்பும், பட்டாசும் தான்.
-
பாகிஸ்தானும் - ஆப்கானிஸ்தானும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு
19 Oct 2025தோஹா : பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
எடப்பாடியார் பின்னால் மக்கள் சக்தியுள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
19 Oct 2025மதுரை, எடப்பாடி பழனிசாமி பின்னால் மக்கள் சக்தியுள்ளது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அ.தி.மு.க.
-
விருதுகளில் நம்பிக்கை இல்லை: நடிகர் விஷால்
19 Oct 2025சென்னை, எனக்கு விருதுகளில் நம்பிக்கை இல்லை. விருதுகள் எல்லாம் பைத்தியக்காரத்தனம்.
-
2,400 அடி உயரத்திற்கு வெடித்து சிதறியது கிளாவியா எரிமலை..!
19 Oct 2025ஹவாய், கடந்த ஆண்டில் இருந்து அடிக்கடி கிளாவியா எரிமலை குழம்புகளை வெளியேற்றி வரும் நிலையில், தற்போது 2,400 அடி உயரத்துக்கு எரிமலை குழம்புகளை பீச்சி அடித்துள்ளது.
-
வாடிக்கையாளர் ஆய்வறிக்கை: உலகளவில் சென்னை மெட்ரோ முதலிடம்
19 Oct 2025சென்னை, அக். 20- உலகம் முழுவதும் உள்ள 32 மெட்ரோ நிறுவன வாடிக்கையாளர் ஆய்வறிக்கையில் சென்னை மெட்ரோ முதலிடம் பிடித்துள்ளது.
-
2026 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் களமிறங்க நெதன்யாகு திட்டம்
19 Oct 2025டெல்அவீவ், இஸ்ரேலில் 2026-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதமர் வேட்பாளராக களமிறங்க அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டுள்ளார். சனிக்கிழமை(அக்.
-
போராட்டக்காரர்கள் மீது வீசப்பட்ட கழிவுகள்: ட்ரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
19 Oct 2025நியூயார்க், அமெரிக்காவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது விமானத்தில் இருந்து கழிவுகளை வீசி அவமானப்படுத்துவது போல அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்யறிவு வீடியோ
-
'பிரதமர் பள்ளிக் கூடங்கள்' திட்டத்தில் இணைகிறது கேரளா: அமைச்சர் தகவல்
19 Oct 2025திருவனந்தபுரம் : பிரதமர் பள்ளிக் கூடங்கள் திட்டத்தில் இணைய இருப்பதாக கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
மலைப்பாதையில் பாறை சரிவு: திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை
19 Oct 2025திருப்பதி, தொடர் விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருப்பதி கோவிலுக்கு அதிக அளவில் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் திருப்பதி மலைப்பாதையில்
-
காசா மக்கள் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தக்கூடும்: அமெரிக்கா திடீர் எச்சரிக்கை
19 Oct 2025நியூயார்க், காசாவில் தற்போது நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு மீறி காசா மக்களின் மீதே தாக்குதல் நடத்தக்கூடும் என்று நம்பத்தகுந்த உளவுத்துறை தகவல்
-
அமெரிக்காவில் ட்ரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
19 Oct 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் 2,500-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
-
3 மாதங்களில் 10 ஆயிரம் கி.மீ. பயணம்: சைக்கிளில் உலகம் சுற்றும் இளைஞர்
19 Oct 2025பாரீஸ் : சைக்கிளில் உலகம் சுற்றும் பிரான்ஸ் இளைஞர் புதுச்சேரி வந்துள்ளார். அவர் 3 மாதங்களில் 10 ஆயிரம் கி.மீ தொலைவு பயணிக்கிறார்.
-
மொசாம்பிக்: படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலி
19 Oct 2025மொசாம்பிக், மொசாம்பிக்கில் உள்ள பெய்ரா கடற்கரையில் நிகழ்ந்த படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலியாகினர்.
-
உயிர் தப்பிய 25,000 அமெரிக்க மக்கள்.. கரீபியன் கடலில் சம்பவம் குறித்து ட்ரம்ப் விளக்கம்
19 Oct 2025நியூயார்க், அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
-
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கியது த.வெ.க.
19 Oct 2025சென்னை, கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கடிதம் எழுதியுள்ள விஜய், அவர்களது வங்கிக்கணக்குக்கு ரூ.20 லட்சம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
-
வரும் 23-ம் தேதி சென்னைக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை
19 Oct 2025சென்னை : அக்.23ம் தேதி சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.