சூப்பர்ஸ்டார் பாராட்டிய அட்ரஸ்

Cini-8

Source: provided

இயக்குநர் இராஜமோகன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிக்கும் படம் அட்ரஸ். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி திரையுலகத்தினரிடமும்,  ரசிகர்களிடத்திலும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் டீஸரை பார்த்த கன்னட  சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் பெரும் ஆச்சர்யத்துடன் இயக்குநரை பாரட்டியதோடு, தனது சமூக வலைத்தள பக்கத்தில் இப்படத்தின்  டீஸரை பகிர்ந்ததோடு, படத்தை பாராட்டி வீடியோ பதிவும் வெளியிட்டுள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில்,

 இயக்குநர் இராஜமோகனின் 

 "அட்ரஸ்" படம் குறித்து கேளிப்பட்டேன். கதையின் மையமே மிக வித்தியாசமாக இருந்தது. படத்தின் டீஸரை எனக்கு இயக்குனர் காட்டினார். டீஸர் மிக அற்புதமாக இருந்தது. படத்தின் டைட்டிலே கதை சொல்வதாக இருந்தது. இந்தப்படம் ஒரு மாற்றத்தை தரும் மக்களின் படைப்பாக இருக்கும். காட்சிகள் எல்லாம் அற்புதமாக படமாக்கப்பட்டிருந்தது. அதர்வா நன்றாக நடித்திருந்தார். இந்தக்குழு கடுமையாக உழைத்திருப்பது டீஸரிலேயே தெரிகிறது. படம் மிகப்பெரிய வெற்றிபெற எனது வாழ்த்துகள் என்று வாழ்த்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து