டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: மகளிர் துப்பாக்கிச்சுடுதலில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது சீனா!

First-Gold 2021 07 24

Source: provided

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கிச்சுடுதலில் முதல் தங்கப்பதக்கம் வென்று சீனா அசத்தியுள்ளது.

205 நாடுகள்...

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒரு வழியாக 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 205 நாடுகள் மற்றும் அகதிகள் அணி ஆகியவற்றை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.

முதல் தங்கப்பதக்கம்...

2021- டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப்பதக்கம் வென்று சீனா அசத்தியுள்ளது. மகளிர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கிச்சுடுதலில் சீன வீராங்கனை யாங் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.  துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் ரஷ்யா 2-வது இடத்தையும்  சுவிட்சர்லாந்து  3-வது இடத்தையும் பிடித்தன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து