முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயக்குனரைப் பாராட்டிய வாசன்

சனிக்கிழமை, 24 ஜூலை 2021      சினிமா
Image Unavailable

Source: provided

ரமணா கம்யூனிகேஷன் சார்பில் இயக்குனர் பாலகிருஷ்ணன் "காமராஜர்" அவர்களின்  வாழ்க்கை வரலாற்றை   படமாக  தயாரித்து தானே இயக்கியும்  வெளியிட்டார். தற்போது இவர்,  "காமராஜர் பொக்கிஷம் மாணவர்களுக்கு" என்ற பெயரில் தமிழ் மற்றும் ஆங்கில நூலினை உருவாக்கி இருக்கிறார்.

காமராஜரின் 119 வது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்படது. இதனை ஒட்டி அவர் வாழ்ந்து மறைந்த அவரது  தி.நகர் இல்லத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் த.மா.க.தலைவருமான திரு. G.K.வாசன் தமிழ் பதிப்பையும், எவர் வின் பள்ளிக் குழுமத்தின் தாளாளர் Dr. புருஷோத்தமன் ஆங்கில பதிப்பையும் வெளியிட்டனர்.

நூலை வெளியிட்டுப் பேசிய திரு.வாசன்,  காமராஜர் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை பல்வேறு மொழிகளில் சப்டைட்டிலுடன் உலகம் முழுவதும் கொண்டு சேர்த்திருக்கிறார். காமராஜர் போன்றே தானும் திருமணம் செய்து கொள்ளாமல் இன்றளவும் அவர் வழிநடத்திய அரசியலை திரைப்படமாக பதிவு செய்த பாலகிருஷ்ணன் இன்றைய மாணவ சமூகத்திடம் காமராஜரின்  வாழ்க்கை வரலாற்றை கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது பெரு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என பாராட்டினார்.

இயக்குநர் பாலகிருஷ்ணன் பேசுகையில்,  பெருந்தலைவர் காமராஜர் சில அரசியல் கட்சிகளுக்கு அரசியல் வியாபார பொருளாகவே தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறார்கள். காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரித்து வெளியிடுவதற்கு கடுமையான நெருக்கடிகளை தான் சந்திக்க நேர்ந்ததாக கூறிய இயக்குனர், அந்தப் படம் வராமல் இருக்கவே பலர் முயற்சித்தார்கள். ஆனால்,  அதையும் கடந்து சொந்தமாக தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட்டேன். அதனால் எனக்கு  நஷ்டம் ஏற்பட்டது. இருப்பினும் காமராஜர் மீது இருக்கும் பற்றால் எனது திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மூலம் காமராஜர் வாழ்க்கையை ஒன்பது மொழிகளில் வெளியிட்டுள்ளோம். ஏற்கனவே காமராஜர் திரைப்படம் ரஷ்யன், ஆங்கிலம், ஜப்பான் மொழிகளில் சப்டைட்டிலுடன் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், விரைவில்

இன்னொரு பிரபலமான தலைவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க இருப்பதாகவும் சொன்னார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து