எடியூரப்பாவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பாராட்டு

Edyurappa-Modi 2021 07 28

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டியுள்ளார்.

கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா கடந்த திங்கட் கிழமை விலகினர். கட்சி மேலிடம் அறிவுறுத்தலின் படி எடியூரப்பா ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. வயது மூப்பு காரணமாக அவரை பா.ஜ.க. மேலிடம் நீக்கியதாக தெரிகிறது.  எடியூரப்பா பதவி விலகியதையடுத்து புதிய முதல்வராக  பசவராஜ் பொம்மை நேற்று பதவியேற்றுக் கொண்டார். 

முதல்வராக  பதவியேற்றுக் கொண்ட பசவராஜ் பொம்மைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர்  எடியூரப்பாவை வெகுவாக பாராட்டியுள்ளார். பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட் பதிவில், கட்சிக்காகவும் கர்நாடக வளர்ச்சிக்காகவும் எடியூரப்பா செய்த பங்களிப்பை அளவிட முடியாது. சமூக நலனுக்காக எடியூரப்பாவின்  அர்ப்பணிப்பு பாராட்டப்படும் என்று அதில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து