இதுவரை 44.61 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை தகவல்

Vaccine 2021 07 26 0

இந்தியாவில் இதுவரை 44.61 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் படிப்படியாக தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தற்போது 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் இதுவரை 44.61 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய  சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.  நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 40,02,358 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து