முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படம் இயக்குவது சுலபம் - ராஜா

வெள்ளிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

புதுமுகங்களை வைத்து " பார்கவி "  என்ற படத்தை தயாரித்து வருகிறார் அருவா சண்ட படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான  v.ராஜா. படத்தை பற்றி ராஜா கூறியதாவது,

ஒரு படத்தை இயக்குவது பெரிய வேலை இல்லை. படத்தை தயாரிப்பது தான் கலைத்துறையில் மிகக் கடினமான விஷயம். எனவே, எனது படைப்பான " பார்கவி "  படத்தின் கதை, திரைக்கதையை நானே எழுதி இயக்கி தயாரிக்க முடிவு செய்துள்ளேன். " பார்கவி "  படம் ஒரு வரலாற்று படமாகும்,  படத்தில் பாண்டி செல்வா மற்றும் ராஜி கோபி இருவரும் இணை இயக்குனர்களாக பணிபுரிகின்றனர்.

ஒளிப்பதிவு சந்தோஷ்பாண்டி.  படத்தின் கதாநாயகன் முகேஷ். இவர் பட்டதாரி இளைஞன், கதாநாயகி ஸ்ரேயா மாடலிங் துறையில் நல்ல அனுபவம் உள்ளவர் இருவரும் நடிப்பு பயிற்சி பெற்று வருகிறார்கள்.

விரைவில் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிப்புடன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. ஒயிட் ஸ்கிரீன் புரொடக்‌ஷன் சார்பில் படத்தை தயாரித்து இயக்குகிறார் வி.ராஜா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து