Idhayam Matrimony

தெருநாய் வழக்கு என்னை பிரபலமாக்கியது: சுப்ரீம் கோர்ட் நீதிபதி விக்ரம்நாத் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 31 ஆகஸ்ட் 2025      இந்தியா
Vikram-Nath 2025-08-30

Source: provided

டெல்லி : தெருநாய் வழக்கு என்னை பிரபலமாக்கியதாத சுப்ரீம் கோர்ட் நீதிபதி விக்ரம்நாத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.

இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனையடுத்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபகள் கொண்ட பெஞ்சிற்கு மாற்றினார்.

இதனையடுத்து டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து புதிய உத்தரவை 3 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ளது.

பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியது.

இந்நிலையில், தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதிகளில் ஒருவரான விக்ரம் நாத், தெருநாய் வழக்கு தன்னை உலகம் முழுவதும் பிரபலமடைய வைத்துள்ளதாக தெரிவித்தார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தேசிய சட்ட சேவை ஆணையம் ஏற்பாடு செய்த மாநாட்டில் பேசிய நீதிபதி நாத், "நீண்ட காலமாக, நான் எனது சிறிய வேலைகளுக்காக சட்டத்துறையில் அறியப்பட்டிருக்கிறேன், ஆனால் இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள முழு சிவில் சமூகத்திலும் எனக்கு அங்கீகாரம் அளித்ததற்காக தெருநாய்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மேலும் இந்த வழக்கை எனக்கு ஒதுக்கியதற்காக நமது தலைமை நீதிபதிக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

2027 இல் இந்தியாவின் தலைமை நீதிபதியாக விக்ரம் நாத் பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து