முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். தொடருக்கான பயிற்சி: மும்பை இந்தியன்ஸ் அணி தொடங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 22 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

அபுதாபி: ஐ.பி.எல். தொடருக்கான பயிற்சியை தொடங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி.

31 போட்டிகள்...

ஐ.பி.எல் தொடரின் 2-ம் பாதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுவரை 29 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் அங்கு நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. சமீபத்தில் ஐ.பி.எல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. 

முதல் ஆட்டத்தில்... 

அதன்படி மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்பட உள்ளது. செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐ.பி.எல் தொடரில் முதாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளது. இந்த தொடரின் முதலாவது பாதியில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் மும்பை அணியிடம் சென்னை அணி தோல்வியை தழுவியிருந்தது.

குவாரண்டைனில்... 

இதற்காக பயிற்சிகளை மேற்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் என 2 அணியுமே தங்களது வீரர்களை பயோ பபுள் பாதுகாப்புடன் அமீரகம் அனுப்பி உள்ளன. அங்கு கடந்த 13-ம் தேதி முதல் குவாரண்டைனில் இருந்த வீரர்கள் தற்போது கொரோனா பரிசோதனைகளில் நெகட்டிவ் என்ற முடிவை பெற்றுள்ளனர்.

முதற்கட்ட பயிற்சி... 

இந்த சூழலில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவருமே தங்களது முதற்கட்ட பயிற்சியில் ஈடுபட்டனர். துபாயில் உள்ள ஐ.சி.சி அகாடமியில் இந்த பயிற்சி முகாம் தொடங்கியது.  

மும்பை இந்தியன்ஸ்... 

இந்நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான முதல் பயிற்சியை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் தொடங்கினர்.  அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதால், திட்டங்கள் ஏதும் இன்றி பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!