தங்கம் விலை சவரனுக்கு ரூ. 384 உயர்வு

Gold-raye-2021-07-2021

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,056-க்கு விற்பனையானது. 

தங்கம் விலையில் கடந்த மாதம் தொடர்ந்து குறைந்து வந்து பவுன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.  ஆனால் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து விலை உயர்ந்ததால் பவுன் மீண்டும் ரூ.35 ஆயிரத்தை கடந்தது. சில நாட்களாக விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. 

இந்த நிலையில் நேற்று தங்கம் பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 672-க்கு விற்பனை செய்யப்பட்டது.  சென்னையில் நேற்று  காலை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.384 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 56-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 507 ஆக இருந்தது.  வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 அதிகரித்து ரூ.68 ஆயிரத்து 700 ஆக இருந்தது. ஒரு கிராம் வெள்ளி ரு.68.70-க்கு விற்பனையானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து