முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் அணிகள் அறிவிப்பு லண்டன்: டி-20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வெறு அணியிலும் பல மாற்றங்கள் செ

வியாழக்கிழமை, 9 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன்: டி-20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வெறு அணியிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

4 நகரங்களில்... 

டி-20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு நகரங்களில் டி-20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி-20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி...

இந்நிலையில் டி-20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயன் மார்கன் தலைமையிலான அணியில் பிரபல வீரர் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை. மனநலத்துக்கு முக்கியத்துவம் அளித்து விளையாட்டிலிருந்து தற்காலிகமாக ஓய்வு பெற்றுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இவர் கடைசியாக 2017-ல் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றார். அணியில் ஆர்ச்சர் இல்லாததால் மணிக்கு 90 மைல் வேகத்தில் பந்து வீசும் மில்ஸ் தேர்வாகியுள்ளார். 

முதலிடத்தில்...

டி-20 தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி, 2016 டி-20 உலகக் கோப்பையில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. 2021 டி-20 உலகக் கோப்பையில் அக்டோபர் 23  அன்று மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராகத் தனது முதல் ஆட்டத்தை விளையாடுகிறது.

இங்கிலாந்து அணி:

இயன் மார்கன் (கேப்டன்), மொயீன் அலி, பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜாஸ் பட்லர், சாம் கரண், கிறிஸ் ஜார்டன், லியம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், டைமல் மில்ஸ், அடில் ரஷித், ஜேசன் ராய், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

டெம்பா பவுமா... 

ஐ.சி.சி டி-20 உலகக்கோப்பை போட்டியில் இடம்பெறும் 15 வீரர்களின் பெயர்பட்டியலை வெளியிட்டிருக்கிறது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி. தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேஷவ் மகாராஜ், குயிண்டன் டி காக் இருவரும் விக்கெட் கீப்பர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணி...

டெம்பா பவுமா (கேப்டன்) ஜோர்ன் ஃபார்டியுன்,  ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் க்ளாசன், கேஷவ் மகாராஜ்,(கீப்பர்), குயிண்டன் டி காக் (கீப்பர்)மார்க்ராம், டேவிட் மில்லர்,  முல்டர், லுங்கி என்கிடி, ஆன்ரிச் நார்ட்ஜே, ட்வைன் ப்ரிடோரியஸ்,  ரபாடா, ராப்ரைஸ் ஷாம்சி,  வான் டேர் டுசைன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அணியில் மாற்றுவீரர்களாக ஆண்டிலே பெக்லுக்வாயோ மற்றும் லிசாட் வில்லியம்ஸ் ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

தமீம் இக்பால்... 

குழிப்பிட்சைப் போட்டு நியூசிலாந்தை குழிக்குள் தள்ளி தொடரை வென்ற வங்கதேசம் உலகக்கோப்பை டி-20 அணியை அறிவித்தது. சமீபத்தில் ஜிம்பாப்வேயை 2-1 என்றும் ஆஸ்திரேலியாவை 4-1 என்றும் இதே வங்கதேசம் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் அறிவிக்கப்பட்ட அணியில் தொடக்க விரர் தமீம் இக்பால் இல்லை, அவரே விலகி விட்டார், இளைஞர்களின் இடத்தை தான் ஆக்ரமிக்க விரும்பவில்லை என்று அவர் தன் இடத்தை தியாகம் செய்துள்ளார்.

ரிசர்வ் வீரர்கள்... 

2016 டி-20 உலகக்கோப்பையில் தமீம் இக்பால் அதிகபட்சமாக 295 ரன்களை 73.75 என்ற சராசரியில் எடுத்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ரூபல் ஹூசைன் லெக் ஸ்பின் ஆல்ரவுண்டர் அமினுல் இஸ்லாம் பிப்லாப் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். நுருல் ஹசன் விக்கெட் கீப்பராக செயல்படுவார். டி-20யில் இனி விக்கெட் கீப்பிங் செய்ய விருப்பமில்லை என்று முஷ்பிகுர் ரகீம் தெரிவித்துள்ளார்.

தொடக்க ஆட்டம்...

அணியில் 8 பேட்ஸ்மென்கள், 2 ஆல்ரவுண்டர்கள், 4 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரேயொரு ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர் உள்ளனர். பங்களாதேஷ் அணி குரூப் பி-யில் ஓமன், பபுவா நியுகினியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்த குரூப்பில் டாப் 2 இடங்களில் பினிஷ் ஆனால் வங்கதேசம் 12 அணிகள் கொண்ட பிரதான சுற்றில் ஆடும். அக்டோபர் 17ம் தேதி ஸ்காட்லாந்தை சந்திக்கின்றனர். இதுதான் உலகக்கோப்பையின் தொடக்கப் போட்டி.

வங்கதேச அணி...

மகமுதுல்லா (கேப்டன்), ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரகீம், சவுமியா சர்க்கார், லிட்டன் தாஸ், ஆபிப் ஹொசைன், மொகமது நயீம், நுருல் ஹசன், ஷமீன் ஹூசைன், முஸ்தபிசுர் ரஹ்மான், டஸ்கின் அகமது, முகமது சயிஃபுதீன், ஷோரிஃபுல் இஸ்லாம், மெகதி ஹசன், நசும் அகமது ரிசர்வ் வீரர்கள்: அமினுல் இஸ்லாம் பிப்லாப், ரூபல் ஹூசைன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து