காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார்: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

Oscar-Fernandes 2021 09 13

இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் நேற்று காலமானார்.

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் நேற்று காலமானார். அவருக்கு வயது 80 நேற்று  மதியம் மங்களூரு யெனெபோயா மருத்துவமனையில் அவர் காலமானார்.

கடந்த ஜூலை மாதம் மூளையில் இருந்து இரத்தக் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்த முன்னாள் அமைச்சர் பெர்னாண்டஸ், தனது வீட்டில் யோகா பயிற்சி செய்யும் போது தலையில் காயம் ஏற்பட்டு மங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இதனையடுத்து,அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

மூத்த காங்கிரஸ் தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து