முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் நிரந்தர குடியேற்றம்: கிரீன்கார்டு பெற இந்தியர்களுக்காக புதிய சட்ட மசோதா விரைவில் அமல்

திங்கட்கிழமை, 13 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : இந்தியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கிரீன் கார்டு பெறுவது தொடர்பாக அமெரிக்காவில் புதிய சட்ட மசோதா இயற்றப்பட உள்ளதாக நியூயார்க் குடியேற்ற சட்ட நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நிரந்தரமாக... 

அமெரிக்காவில் ஆண்டு தோறும் வெளிநாடுகளில் இருந்து பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மக்கள் பலர் குடியேறுகின்றனர். குறிப்பாக, அதில் இந்திய மக்களின் வருகை அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற கிரீன் கார்டு கட்டாயம் என்பதால் இதற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. 

புதிய மசோதா... 

இதனால், அமெரிக்காவில் ஆண்டு தோறும் 1.4 லட்சம் கிரீன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கிரீன் கார்டு இந்தியர்களால் பல்வேறு காரணங்களால் எளிதில் பெற முடிவதில்லை. இதனால், இந்தியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கிரீன் கார்டு பெறுவது தொடர்பாக அமெரிக்காவில் புதிய சட்ட மசோதா இயற்றப்பட உள்ளது.

இந்தியர்களுக்காக... 

இதுகுறித்து நியூயார்க் குடியேற்ற சட்ட நிறுவனத்தின் தலைவர் சிரஸ் டி மேத்தா கூறியிருப்பதாவது., அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற்றம் செய்ய இந்தியர்களுக்காக புதிய சட்ட மசோதா விரைவில் இயற்றப்பட இருக்கிறது. அதில் முக்கிய அம்சமாக, கிரீன் கார்டு பெறுவதில் நிலுவையில் உள்ள இந்திய விண்ணப்பத்தாரர்கள் ரூ.3.80 லட்சம் கூடுதலாக செலுத்தி கிரீன் கார்டு பெற்றுக் கொள்ள முடியும். 

கூடுதலாக பணம்... 

எச்1பி விசா வைத்திருப்பவர்களும் தங்களின் வயது வரம்பு முடியும் தருவாயில் இருந்தாலும், அல்லது முடிந்து இருந்தாலும் இந்த புதிய மசோதாவின் கீழ் கூடுதலாக பணம் செலுத்தி கிரீன் கார்டு பெற்றுக் கொள்ளலாம். இது ஒரு அருமையான மசோதா. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து