பீகார் எம்.பி. மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு

Prince-Raj-Baswan 2021 09 1

Source: provided

பாட்னா : பீகார் மாநில எம்.பி. மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் சமஸ்திப்பூர் தொகுதி எம்.பி. பிரின்ஸ் ராஜ் பஸ்வான். இவர் லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்தவர். இதற்கிடையில், பிரின்ஸ் ராஜ் பஸ்வான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக ஒரு பெண் குற்றஞ்சாட்டினார்.  இது தொடர்பாக அந்த பெண் கடந்த மே மாதம் டெல்லி போலீசில் புகார் அளித்தார். ஆனால், அந்த பெண்ணின் குற்றச்சாட்டுகளை மறுத்த பிரின்ஸ் பெண் தன்னிடம் பணம் பெறும் நோக்கத்தோடு போலியான குற்றச்சாடுகளை தெரிவிப்பதாக கூறி அந்த பெண் மீது புகார் அளித்தார். 

இதற்கிடையில், தான் அளித்த புகார் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என கூறியும், எம்.பி. பிரின்ஸ் பஸ்வான் மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாதிக்கப்பட்ட பெண் டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள லோக் ஜனசக்தி எம்.பி. பிரின்ஸ் ராஜ் பஸ்வான் மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த டெல்லி போலீசாருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, பிரின்ஸ் பஸ்வான் மீது டெல்லி ஹன்நாட்டி பிளேஸ் போலீசார் பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்துள்ளனர். எம்.பி. பிரின்ஸ் பஸ்வான் பாலியல் பலாத்காரம், குற்றச்சதி, ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து