ஊழல் செய்தவர்கள் சிறையில் உள்ளனர்: உ.பி. விழாவில் பிரதமர் மோடி பேச்சு

Modi 2020 12 18

Source: provided

அலிகார் : தற்போதைய மத்திய அரசு மக்கள் நலனுக்காக, நாட்டின் வளர்ச்சிக்காக செயல்படுகிறது. ஆனால் முந்தைய ஆட்சிக்கார்கள் நாட்டை கொள்ளை அடித்தனர். இதனால் அதில் பலர் சிறையில் உள்ளனர் என்று உபி.,மாநிலத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்று பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.

மேற்கு உ.பி.,யில் செல்வாக்கு மிக்க சமூகமான ஜாட் இனத்தை சேர்ந்த ராஜா மகேந்திர பிரதாப் சிங் பெயரில் பல்கலைக்கழகம் துவங்கப்பட உள்ளது. அலிகார் மாவட்டத்தில் உள்ள இந்த பல்கலைக் கழகத்தில் 395 கல்லுாரிகள் அங்கீகாரம் பெற்று செயல்பட உள்ளன. இந்த பல்கலையின் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

பாதுகாப்பு துறையில் இறக்குமதியை சார்ந்திருந்த இந்தியா, இன்று பெரிய அளவில் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது. நாடு மட்டும் அல்லாமல், ஒட்டு மொத்த உலகமும், இந்தியாவில் இருந்து போர்கப்பல்கள், டிரோன்கள், விமான உதிரிபாகங்கள் மற்றும் நவீன குண்டுகள் உற்பத்தி செய்யப்படுவதை பார்க்கின்றன. பாதுகாப்பு துறை சார்ந்த ஏற்றுமதியில், இந்தியா புதிய அடையாளத்தை நோக்கி முன்னேறுகிறது. ஒரு காலத்தில் நிர்வாகத்தை குண்டர்கள் கையில் எடுத்தனர். ஊழல் செய்தவர்களின் கைகளில் ஆட்சி இருந்தது. தற்போது, அவர்கள் சிறையில் உள்ளனர்.

உ.பி., வளர்ச்சிக்கு மத்திய அரசும், யோகி அரசும் இணைந்து பணியாற்றி வருகிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதிராக செயல்படும் சக்திகளுக்கு எதிராக நாம் செயல்பட வேண்டி உள்ளது. இன்று உலகம் மற்றும் நாட்டில் உள்ள சிறிய மற்றும் பெரிய முதலீட்டாளர்களை உ.பி., கவர்ந்துள்ளது. இதற்கான சரியான சூழலை உ.பி. மாநில அரசு உருவாக்கி உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியை நோக்கி யோகி அரசு செயலாற்றி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து