முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் தமிழ்நாடு கடல்சார் வாரிய கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 14 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை  : தமிழ்நாடு கடல்சார் வாரிய 93-வது கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் எ.வ. வேலு பேசியதாவது, 

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 3-பெரிய துறைமுகங்களும், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் 6-சிறிய துறைமுகங்களும், 11-தனியார் அரசு கூட்டு துறைமுகங்களும் செயல்பட்டு வருகின்றன.  சென்னையில் இருப்பது போல் மற்ற இடங்களிலும், பொதுமக்களுக்கு தேவையான பொழுதுபோக்கு வசதிகள் தற்போது இல்லாத நிலை உள்ளது.  எனவே, பிற இடங்களிலும் பொழுது போக்கு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டியது அவசியமாகிறது.

கடற்கரைகளில் ஓயாத அலைகளும், நீலக்கடலும் மக்களுக்கு கண்கொள்ளா காட்சிகளாக அமைந்திருப்பது இயற்கை நமக்கு வழகியுள்ள செல்வமாகும்.  கடற்கரைகளையும், கடல் அலைகளையும், நீண்டு, பரந்து, விரிந்துள்ள நீலக்கடலையும், கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து மகிழும் மக்களுக்கு பாதுகாப்புடன் கூடிய நீர் விளையாட்டுகள் உட்பட பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளையும் கடற்கரை பகுதிகளில் அமைத்துக் கொடுத்தால் மக்கள் மேலும், உற்சாகம் அடைவார்கள் என்பது என் எண்ணம்.

கடலுக்குள் கடலின் ஆழம், கடல் அலைகளின் தன்மை ஆகியவற்றிற்கு ஏற்ப எங்கெல்லாம் படகுப்போக்குவரத்து நடத்த அனுமதிக்கலாமோ அங்கெல்லாம் ஆய்வு செய்து படகு போக்குவரத்துகளை அனுமதிப்பது குறித்து பரிசீலணை செய்யலாம்.  இதற்கு முன் உதாரணமாக ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கரையில் 2010-ம் ஆண்டு படகு போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டு, நடத்தப்பட்டுள்ளது. அது பொதுமக்களின் என்பதை அனைவரும் அறிந்ததே.  அதற்கு பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதுடன் தேவையான கட்டுமானங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

தற்போதைய அரசின் நிதிநிலைமை இதற்கெல்லாம் ஒத்துழைக்குமா? என்பது சந்தேகமே.  வெளிநாடுகளில் உள்ளது போன்று நீர் விளையாட்டுகள், போட்டிங் போன்றவற்றை தனியார் முதலீடு மூலம் மேற்கொள்ளலாமா? என்பதை இந்த வாரியம் ஆய்வு செய்ய வேண்டும்.

கடல் நீரில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது அனைவரும் விரும்பக்கூடியது.  சிறிய கப்பல் மூலம் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை ஒவ்வொரு துறைமுகத்திற்கும் உல்லாசப் பயணம் போய்வர அனுமதிக்க முடியுமா?  என்பதையும் இந்த வாரியம் பரிசீலிக்க வேண்டும்.

சென்னையிலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு நேரடியாக செல்லும் வகையில் இராமேஸ்வரம் போட் மெயில் ரயில் சேவையும், அதன் தொடர்ச்சியாக கப்பல் சேவையும் நடைமுறையில் இருந்தது.   தற்போது, அத்தகைய ரயில் சேவையை தொடங்குவது குறித்து ஒன்றிய அரசின் அனுமதி பெறலாமா? என்பதை வாரியம் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.  

மேலும், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 31.3.2021 உடன் முடிவடைந்த நிதியாண்டு மற்றும் ஏப்ரல் 2021 முதல் ஜூலை 2021 மாதங்களுக்கான நிதி மற்றும் செயல்பாடு குறித்த அறிக்கைகள் வாரியக் குழும கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

இக்கடல்சார் வாரியக்குழுமக் கூட்டத்தில் , பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், கடல்சார் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் பாஸ்கரன், நிதித்துறை கூடுதல் செயலாளர், பிரசாந்த் வடநேரே, மாநில துறைமுக அலுவலர் அன்பரசன், சுங்கத்துறை உதவி ஆணையாளர் டாக்டர் எ.வெங்கடேஷ் பாபு மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து