முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசி. விக்கெட் கீப்பர் நீக்கம்

வியாழக்கிழமை, 16 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

 

 

நியூசி. விக்கெட் கீப்பர் நீக்கம்

 பாகிஸ்தான் நாட்டில் 18 ஆண்டுகளுக்கு பின்பு நியூசிலாந்து அணி சுற்று பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் (செப்.171921) மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் (செப்.252629அக்.13) விளையாடுகிறது.  இதற்காகஇஸ்லாமாபாத் விமான நிலையத்தில் இருந்து நியூசிலாந்து வீரர்கள் குண்டு துளைக்காத பஸ்சில் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த நிலையில்வங்காளதேசத்திற்கு எதிரான 4வது இருபது ஓவர் போட்டியில் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் டாம் பிளண்டெல்லுக்கு காயம் ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து நியூசிலாந்து விக்கெட் கீப்பர் பிளண்டெல் நீக்கப்பட்டு உள்ளார்.  அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் டேரைல் மிட்செல் சேர்க்கப்பட்டு உள்ளார். 

____________ 

பாக். வீரர் ஹசன் அலி நம்பிக்கை 

2017 ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது. எனினும் டி-20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் ஒருமுறை கூட வீழ்த்தியதில்லை. இந்தமுறை அப்படி நடக்காது என்கிறார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி. பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஹசன் அலி கூறியதாவது:

2017-ல் நன்றாக விளையாடி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றோம். டி-20 உலகக் கோபையில் இந்திய அணியை மீண்டும் தோற்கடிப்போம். எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். இரு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பால் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது கூடுதல் அழுத்தத்தைத் தரும் என்றார்.
____________

தெ.ஆ டி-20 தொடரை வென்றது

இலங்கைக்கு எதிரான டி20 தொடரின் கடைசி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை அந்த அணி முற்றிலுமாக கைப்பற்றியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 14.4 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் அடித்து வென்றது. தென் ஆப்பிரிக்காவின் குவின்டன் டி காக் ஆட்டநாயகன்தொடா்நாயகன்விருது வென்றார்.
______________

ஓய்வு பெற்றார் ஹோல்டிங்

முன்னாள் கிரிக்கெட் வீரரான மைக்கேல் ஹோல்டிங்வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.  மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 60 டெஸ்ட்102 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய மைக்கேல் ஹோல்டிங்391 சர்வதேச விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

1975 முதல் 1987 வரை விளையாடினார். அதன்பிறகு கிரிக்கெட் வர்ணையாளராக ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் 20 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றினார். வெளிப்படையான கருத்துகளாலும் இனநிற வேறுபாடுகளுக்கு எதிரான தன்னுடைய வலுவான நிலைப்பாடுகளுக்காகவும் ரசிகர்கள் மத்தியில் அவருடைய வர்ணனைக்கு எப்போதும் ஆதரவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
____________

ஹர்பஜனுக்கு தமிழில் வாழ்த்து

ஜே.பி.ஆர்.-  ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கியுள்ள படம் 'பிரண்ட்ஷிப்'. இப்படம் தமிழ்தெலுங்குஇந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது.  இதில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடித்துள்ளார்.  இப்படத்தில் அர்ஜுன்சதீஷ்லாஸ்லியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'பிரண்ட்ஷிப்'  திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில்முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரர் சுரேஷ் ரெய்னா ஹர்பஜன் சிங் மற்றும் படக்குழுவினருக்கு தமிழில் டுவீட் செய்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘பஜ்ஜி பா ஹர்பஜன் சிங் என் அண்ணாத்த! பிரண்ட்ஷிப் டிரைலர்டீஸர் எல்லாம் வலிமையா இருக்குபடம் கண்டிப்பா பீஸ்டா இருக்கும். பிரண்ட்ஷிப் படகுழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களே நீங்க எல்லோரும் தியேட்டர்ல படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க’’ என்று பதிவிட்டுள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து