மிசோரம் மாநிலத்தில் மேலும் 1,121 பேருக்கு கொரோனா

Corona 2021 07 21

Source: provided

ஐஸ்வால் : மிசோரம் மாநிலத்தில் மேலும் 1,121 - பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்று பாதிப்பால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பு முந்தைய நாளை விட நேற்று 281- குறைந்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் தொற்று பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. நேற்றைய தொற்று பாதிப்பு விகிதம் 14.35 சதவிகிதமாக உள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,809- ஆக உயர்ந்துள்ளது.

நேற்று தொற்று பாதித்தவர்களில் 251 பேர் சிறார்கள் ஆவர். மாநிலத்திலேயே அதிகபட்சமாக தலைநகர் ஐஸ்வாலில் 256- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து